காளான் வித்து உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு, வரும் பொங்கலூரில் வரும் 27ம் தேதி துவக்கம்
Tirupur News- திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் வரும் 27ம் தேதி, காளான் வித்து உற்பத்தி குறித்த பயிற்சி நடக்கிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது,
பொங்கலூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வித்து உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம்.
இப்பயிற்சியில், தாய்க்காளான் வித்து, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காளான் வித்து உற்பத்தி செய்வது குறித்து செயல் விளக்கப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த இரு நாள் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 04255 296155 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 63794 65045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு குறித்த நடைமுறை
அடுக்குமாடி குடியிருப்புகளை பதியும்போது கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வரும் என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி ரூ.50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ரூ.20 லட்சம் வரையிலான புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தினால் போதும்.
இந்த தகவலை பதிவுத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu