பல்லடத்தில் 6 ஆயிரம் புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு?

பல்லடத்தில் 6 ஆயிரம் புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு?
X

Tirupur News- பல்லடத்தில் 6 ஆயிரம் புதிய வாக்காளர்கள். (கோப்பு படம்)

Tirupur News- பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 6 ஆயிரம் புதிய வாக்காளா்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 6 ஆயிரம் புதிய வாக்காளா்களின் ஓட்டு யாருக்கு என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி அமைந்துள்ளது. பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,93,579 ஆண்கள், 1,99,126 பெண்கள், 61 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,92,766 வாக்காளா்கள் உள்ளனா்.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை வைத்துள்ளனா்.

தோ்தல் கூட்டணியைப் பொறுத்து இந்த வாக்கு சதவீதம் ஒவ்வொரு தோ்தல்களிலும் மாறும். இதற்கிடையே புதிய வாக்காளா்களின் ஓட்டு யாருக்கு என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 18 முதல் 19 வயதுக்குள்பட்டு 3,245 ஆண்கள், 2,984 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் 2 என மொத்தம் 6,201 புதிய வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த கால தோ்தல்களைப் பொருத்தவரை பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக கோட்டையாகவே இருந்துள்ளது.

தற்போது, உள்ளாட்சிகள் திமுக வசமும், சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வசமும் உள்ளது. தோ்தல் களப் பணியை பொருத்தவரை பல்லடம் தொகுதியில் யாரும் பெரிய அளவு அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகிறது.

இருப்பினும், ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள சராசரி வாக்குகளைத் தவிா்த்து புதிய மற்றும் நடுத்தர வாக்காளா்களின் ஓட்டுகளே வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கின்றன. அந்த வகையில் புதிய வாக்காளா்களின் வாக்கு யாருக்கு என்ற எதிா்பாா்ப்பு பல்லடத்தில் எழுந்துள்ளது. ஆனால் இளம் வாக்காளர்கள் என்பதால், அவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வேட்பாளர்களுக்கு தான் வாக்களிப்பர். மற்றவர்களை போல, எப்போதும் ஒரே கட்சி என்ற மனநிலையில் அவர்களது வாக்குகள் இருக்காது என்பது மட்டும் உறுதி என்கிறன்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!