பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வேலை செய்ய அனுமதித்த 2 பேர் கைது

பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வேலை செய்ய அனுமதித்த 2 பேர் கைது
X

Tirupur News-கல்குவாரி அனுமதி காலாவதியான நிலையில், அங்கு வேலை செய்ய அனுமதித்த 2 மேற்பார்வையாளர்கள் கைது. (கோப்பு படம்) 

Tirupur News- பல்லடம் அருகே, பெருமாகவுண்டம்பாளையத்தில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமா கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது.

இந்நிலையில், கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக நொறுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்குவாரியில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி என்பவர் சமையல் செய்யும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்பட்டது. இதில் லட்சுமி மற்றும் பக்கத்து குடியிருப்பில் இருந்த மேலும் 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக அதன் உரிமையாளர்கள் விஜயலட்சுமி, சண்முகசுந்தரம், ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களான கார்த்தி (வயது 32), சக்திவேல் முருகன் (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!