காமராஜர் விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு
Tirupur News,Tirupur News Today- மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதற்கான போட்டிகளை நடத்தி, தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தமிழ் மாணவர்களின் பெயர் பட்டியல், 10ம் வகுப்பில் தலா 10 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 15 பேர் என, மொத்தம் 30 மாணவர்களின் பெயர் விவரங்களை அனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், பள்ளிகளில் இருந்து தகுதியான மாணவர்கள் போட்டிகள் நடத்தி, அதன்மூலம் தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் அனுப்பப்படும். அதன்பின், பள்ளி கல்வித்துறை மூலம், அவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu