உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு

உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
X

காங்கயம், தேவாங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன், சித்திரை பொங்கல் விழா, சிறப்பு அலங்காரம்.

Tirupur News-உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.

Tirupur News,Tirupur News Today- உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் உடுமலை மாரியம்மன் கோவிலில் தோ்த் திருவிழா கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் கே.தீபா ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரத்து 743 இருந்தது. மேலும் 55.77 கிராம் தங்கமும், 120.38 கிராம் வெள்ளியும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரைப் பொங்கல் விழா

காங்கயம், தேவாங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன், மாரியம்மன் கோவில்களின் சித்திரைப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு அச்சு வெல்லத்தில் கோட்டை கட்டி, கரும்பில் பச்சை பந்தல் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து காங்கயம் பழையகோட்டை சாலையில் உலா ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோவில் குளத்தங்கரையில் இருந்து மாரியம்மனுக்கு பூவோடு கொண்டு வந்து செலுத்துதல் மற்றும் பக்தா்கள் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறவுள்ளது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்க சமூக நற்பணி மன்றத் தலைவா் கே.எஸ்.செல்வராஜ் தலைமையில் மன்ற நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தல்

கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வாசு செய்தியாளா்களிடம் கூறியதாவது,

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் ஒரு கால பூஜை நடை பெறும் கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடா்பாக சென்னை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கோரிக்கையை பரிசீலிக்க உயா்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கோயில் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு, செயல் அலுவலா்கள் அல்லது தக்காா் நிலையில் உள்ள அதிகாரிகள் மூலம் அடையாள அட்டை வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே கோயில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க இந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றாா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!