அது கெடக்கு வெங்காயம்..! கண்ணீர் சிந்த வைக்கிறது வெங்காயம் விலை..!

அது கெடக்கு வெங்காயம்..! கண்ணீர் சிந்த வைக்கிறது வெங்காயம் விலை..!
X

சின்ன வெங்காயம்.

Onion Price Today -விலைவாசி உயர்வு, மக்களை திக்குமுக்காட வைக்கிறது. சமையலில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் (கிலோ ) விலை, ரூ. 100 ஐ தொட்டு விட்டதால், இல்லத்தரசிகள், கவலையடைந்துள்ளனர்.

Onion Price Today -சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது; ஒரு கிலோ ரூ. 100-ஐ தொட்டுள்ள நிலையில், இன்னும் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த பகுதிகளில் இவை அனைத்து சீசன்களிலும் பயிரிடப்படும் பயிராக உள்ளது. ஆனாலும் பல நேரங்களில் விலை சரிவால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தற்போது சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேநேரத்தில் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக உள்ள சின்ன வெங்காயங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் வரத்து குறைந்து விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதால், தற்போது அறுவடை செய்துள்ள சின்ன வெங்காயங்களை பட்டறை அமைத்து இருப்பு வைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பொதுவாக வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும்.ஆனால் வெங்காய சாகுபடியும் கண்ணீர் வர வைக்கும் பயிராகவே உள்ளது. அடிக்கடி விலை குறைந்து, அசலைக் கூட தேற்ற முடியாமல் நஷ்டமடையும் விவசாயிகள் விடும் வேதனைக் கண்ணீர் மட்டுமல்லாமல், திடீர் விலை உயர்வால் திகைக்க வைத்து லாபத்தை அள்ளித் தந்து ஆனந்தக் கண்ணீர் விட வைக்கும் பயிராகவும் சின்ன வெங்காயம் உள்ளது. தற்போதைய நிலையில் சின்ன வெங்காயம் சாகுபடிக்கான விதை, உழவு, உரம், மருந்து என உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ஏக்கருக்கு ரூ 1 லட்சத்துக்கு மேல் செலவு செய்யும் நிலை உள்ளது. ரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 4 டன் முதல் 8 டன் வரை மகசூல் எடுக்க முடியும்.ஆனால் பருவநிலை கைகொடுக்காததால் பல விவசாயிகளும் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலையே உள்ளது.கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ. 20 க்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 50-க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் நல்ல தரமான சின்ன வெங்காயம் தற்போது ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மேலும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து ரூ. 100 க்கு மேல் விற்கப்படும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதனைக்கருத்தில் கொண்டு விவசாயிகள் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து வருகின்றனர்.அறுவடைக்குப் பிறகு சேமித்து வைப்பதற்கு உகந்ததாகக் கருதப்படும் கோ 4,கோ (ஓ என்- 5 உள்ளிட்ட ரகங்களாக இருந்தால் 150 நாட்கள் வரை சேமித்து வைக்க முடியும்.அதேநேரத்தில் அறுவடை சமயத்தில் மழை பெய்தால் அந்த வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாது.எனவே மழைக்கு முன் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர், என்றனர்.

விவசாயிகள் தரப்பில், விலை உயர்வு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிற அதேவேளையில், ஏற்கனவே விலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை விலைவாசி உயர்வு, திக்குமுக்காட வைக்கிறது. அதுவும், சமையலில் முக்கியமாக பயன்படுத்தப்படும் சின்னவெங்காயம் விலை உயர்வு, இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story