வெள்ளகோவிலில் வேளாண் பண்ணை கருவிகளை அதிகாரிகள் ஆய்வு

வெள்ளகோவிலில் வேளாண் பண்ணை கருவிகளை அதிகாரிகள் ஆய்வு
X

பைல் படம்.

சேனாதிபாளையம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்பாலின் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணை வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பமாக பயிறு பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த டிராக்டரால் இயக்கக்கூடிய சுழல் கலப்பைகள், தார்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

வெள்ளகோவில் வட்டாரம் வெள்ளகோவில், மங்கலப்பட்டி, ஊடையம் கிராமங்களில் பயனாளிகளுக்கு சுழல் கலப்பை மானிய விலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேனாதிபாளையம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்பாலின் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளது. இப்பண்ணை கருவிகளை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன், வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னுசாமி மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடையே பண்ணை கருவிகளின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture