திருப்பூர், பல்லடம் பகுதிகளில் இன்று, நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் இன்று, நாளை மின்தடை அறிவிப்பு
X

Tirupur News- திருப்பூர், பல்லடம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படங்கள்)

Tirupur News- திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர்; குமார்நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இந்த துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமார் நகர் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் நடக்க உள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை (நவம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் (ஒரு பகுதி), அலகுமலை (ஒரு பகுதி), காட்டூா் (ஒரு பகுதி), மற்றும் உகாயனூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ( வியாழக்கிழமை) மின்தடை

பல்லடம்: பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடக்க உள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

பனப்பாளையம் துணை மின் நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பனப்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், மாதப்பூா், நல்லாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!