திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்புப் பணி துவக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்புப் பணி துவக்கம்
X

Tirupur News- மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்புப் பணி துவங்கியது. (மாதிரி படம்)

Tirupur News-திருப்பூர் மாவட்டத்தில் ,மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்புப் பணி நேற்று துவங்கியது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்புப் பணி பதொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு திருப்பூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன களப் பணியாளா்களும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்க களப் பணியாளா்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வாா்கள். களப் பணியாளா்கள் மூலம் பெறப்படும் தங்களது தகவல்கள் இக்கணக்கெடுப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியோகமான செயலியில் பதிவு செய்யப்படும்.

திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகள், அவா்களது பெற்றோா், பாதுகாவலா்கள் மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல்களை இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள களப் பணியாளா்களிடம் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story