திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் பரமபத வாசல் திறப்பு
இந்துகளின் விரத வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுந்த ஏகாதசி, இந்த வைகுந்த ஏகாதசி வைபவம் சனிக்கிழமை அனைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுந்த ஏகாதசி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 13ம் தேதி பகல்பத்து பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 17ம் திருப்பள்ளி எழுச்சியும், வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலம், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி பெருவிழாவானது சனிக்கிழமை இன்று காலை 3 மணி அளவில் ஸ்ரீ வைஷ்ணவ வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க மூலவர் அருள்மிகு வீரராகவப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, காலை 5.30 மணி அளவில் கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் சொர்க்கவாசல் வழியாகப் பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு கருடசேவை திருவீதியுலாவும், இரவு 8 மணி அளவில் இராப்பத்து உற்சவ ஆரம்பமும் நடைபெறுகிறது.
முன்னதாக திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு ஒரு லட்சத்து 8 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu