புதிய திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் அக். 17ம் தேதி மின்தடை அறிவிப்பு

புதிய திருப்பூர், ஊத்துக்குளி,  செங்கப்பள்ளி பகுதிகளில்  அக். 17ம் தேதி மின்தடை அறிவிப்பு
X

Tirupur News- புதிய திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், வரும் 17ம் தேதி புதிய திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள புதிய திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளது. ஆகவே, வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்;

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகா், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளதால் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 17) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி

ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், வி.ஜி.புதூா், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டுபுதூா், ஏ.கத்தாங்கன்னி.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி

செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story