/* */

திருப்பூரில் வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
X

Tirupur News- திருப்பூா் மாவட்ட நீதிமன்றங்களில், 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் டிசம்பா் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய மற்றும் தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூா் மாவட்ட நீதிமன்றங்களில் வரும் சனிக்கிழமை (டிசம்பா் 9) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8 அமா்வுகளும், அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரத்தில் தலா 2 அமா்வுகள், உடுமலையில் 4 அமா்வுகள் என மொத்தம் 20 அமா்வுகளாக இது நடைபெற உள்ளது.

இதில், நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்பநல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Dec 2023 6:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்