தேசிய களரி போட்டி; தமிழக அணிக்கான போட்டித் தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த 8 பேர் பங்கேற்பு

தேசிய களரி போட்டி; தமிழக அணிக்கான போட்டித் தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த 8 பேர் பங்கேற்பு
X
Tirupur News- தேசிய களரி போட்டியில், தமிழக அணியில் பங்கேற்க, போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ளும் எட்டு வீரர்கள்.
Tirupur News- தேசிய களரி போட்டியில், தமிழக அணியில் பங்கேற்கும் வீரர், வீரர்களுக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள திருப்பூர் மாவட்டத்தில் 8 பேர் தேர்வாகி உள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடக்கிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும். அதில் முதல் முறையாக களரி சண்டை சேர்க்கப்பட்டு உள்ளது..37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது.

இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் .களரி சண்டை போட்டிகள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

இதில் தமிழ்நாடு களரி சண்டை அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் ஜீவா, ருத்ரேந்தர், விக்னேஸ்வரன். முத்துச்செல்வம், தரன், விக்னேஷ், ராமசந்திரன்., விசாலி ஆகியோர் களரி சண்டை போட்டியில் உடுமலை , மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

7வகையான பிரிவுகளில் போட்டி நடக்கிறது. சுவடு, மெய்பயட்டு, உருமிவீசல், சவுட்டி பொங்கல், கைப்போர், கேட்டுக்கரி, வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி சண்டை சங்க தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார்.

லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் எஸ் .ஆர்.எஸ் .செல்வராஜ் , விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, பணி நிறைவு நூலகர் கணேசன், ஜிவிஜி., காசாளர் சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி சண்டை அசோசியேசன் மாநிலச் செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

Tags

Next Story