அவிநாசி; மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தோ்த் திருவிழா கொடியேற்றம்
Tirupur News- மொண்டிபாளையம் பெருமாள் கோவில் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- சேவூா் அருகே மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
அவிநாசி வட்டம், சேவூா் அருகே மேலத்திருப்பதி எனப் போற்றப்படுவதாக மொண்டிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தோ்த் திருவிழா ஜனவரி 24-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளன.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடு ஆகியவை ஜனவரி 25-ம் தேதியும், சுவாமி சேஷ வாகனத்தில் திருவீதி உலா ஜனவரி 26-ஆம் தேதி காலையிலும், தெப்பத்தோ்த் திருவிழா இரவும் நடைபெறவுள்ளன.
மகாதிருமஞ்சனம், மகாதரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனை ஆகியவையுடன் ஜனவரி 27-ம் தேதி விழா நிறைவடைகிறது.
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி (கோப்பு படம்)
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் தைப்பூச தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் மிகவும் பிரசித்திபெற்ற கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தைப்பூச தோ்த்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக புதன்கிழமை காலை 8.30 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஜனவரி 25-ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதியுலாவும், ஜனவரி 25-ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
இதையடுத்து, ஜனவரி 26-ம் தேதி காலை 6.30 மணி அளவில் கீழ்திருத்தோா் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கதித்தமலை ஆண்டவா் சுவாமி ரத ஆரோகணம் மலைத்தேரோட்டம் ஜனவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து இரவு 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் புஷ்ப பல்லாக்கில் திருவீதியுலா வருவதால், ஜனவரி 30-ம் தேதி காலை 10 மணி அளவில் மஞ்சள்நீராடலுடன் திருவிழா நிறைவடைகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் சரவணபவன், செயல் அலுவலா் மாலதி ஆகியோா் செய்து வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu