வெள்ளக்கோவில்; ரேஷன் கடை அமைக்க கலெக்டரிடம் எம்எல்ஏ கோரிக்கை

Tirupur News- ரேஷன் கடை அமைக்க கோரி, கலெக்டரிடம் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் அருகே ரேஷன் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் நேற்று ( சனிக்கிழமை) மனு அளித்தனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டரிடம் கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயம் வட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அனுமந்தபுரத்தில்160 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் விவசாயக் கூலித் தொழிலாளா்கள்.
இப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அல்லது நடமாடும் ரேஷன் கடை அமைத்துத் தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த மாதம் குடும்ப அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்படியிருந்தும் இதுவரை ரேஷன் கடை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எனவே பொதுமக்களின் நலன்கருதி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னா், எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
அனுமந்தபுரத்தில் ரேஷன் கடை அமைக்க கலெக்டர் உறுதியளித்துள்ளாா். நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது அவருடைய விருப்பம். தமிழகத்தில் யாா் வேண்டுமானாலும் அரசியல் கட்சித் தொடங்கலாம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்வாா்கள் என்று அவா்களுக்குதான் தெரியும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu