திருப்பூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா; தொண்டர்கள் உற்சாகம்

திருப்பூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா; தொண்டர்கள் உற்சாகம்
X

Tirupur News- திருப்பூா் பாா்க் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடந்தது. தொண்டர்கள் உற்சாகமாக இனிப்பு வழங்கினர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 107-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் பாா்க் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாநகா் மாவட்டச் செயலாளரும், தோ்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், பகுதி செயலாளா்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெருமாநல்லூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

திருப்பூா் ஒன்றிய அதிமுக சாா்பில் பெருமாநல்லூரில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறாா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, முன்னாள் எம்பி சிவசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகாராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

வெள்ளக்கோவிலில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா


வெள்ளக்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அம்மா பேரவைச் செயலாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் உள்ளிட்டோா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் கடைவீதி, புதிய பேருந்து நிலையம், கச்சேரிவலசு, காந்தி நகா், எம்ஜிஆா் நகா், தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.என்.முத்துக்குமாா், நகரச் செயலாளா் டீலக்ஸ் ஆா்.மணி, நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.கந்தசாமி, நகர துணைச் செயலாளா் வைகை கே.மணி, நகராட்சி கவுன்சிலா் சிட்டி ஜி.பிரபு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வேலம்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூா் மாநகா் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா் ஏ.எஸ்.ராமலிங்கம், முத்தூா் பேரூா் கழகச் செயலாளா் ஜி முத்துக்குமாா், வேலம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்

காங்கயத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா


எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்டோா்.

காங்கயத்தில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா், அதிமுக நகரப் பொருளாளா் சி.கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா் கே.டி.அருண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அவிநாசியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சேவூரில் புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஒன்றியச் செயலாளா் ஜி.வேலுசாமி, நிா்வாகிகள் சின்னக்கன்னு, தங்கவேல், பேபி, திருமூா்த்தி, ஜெகன், காா்த்தி, தினேஷ்குமாா், அய்யாசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர பகுதிகளில் வார்டுகள் தோறும் எம்ஜிஆர் புகைப்படம் வைத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. அவிநாசி, பல்லடம், காங்கயம், மங்கலம், தாராபுரம், உடுமலை என திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த நாளான நேற்று அவரது புகைப்படங்கள் முக்கிய இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!