மகா சிவராத்திரி: திருப்பூர் கோயில்களில் விடியவிடிய பக்தர்கள் தரிசனம்
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால பூஜைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனா்.
மகா சிவராத்திரி விழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால பூஜைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனா்.
விடியவிடிய கண்விழித்து, தேவாரம், திருவாசகம், 12 திருமுறைகளை இசைத்து பக்தர்கள் கூட்டு வழிபாடு மேற்கொண்டனா். மேலும், கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதேபோல, திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோயில், நல்லூர் ஈஸ்வரன் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வா் கோயில், சர்கார் பெரியபாளையம் சுக்ரஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதே போல் அம்மன் கோயில்களில் நேற்று முனுதினம் நல்லிரவு மயானபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. உடுமலை தாலூக்கா காரத்தொழுவு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நல்லிரவு மயான பூஜை நடைபெற்றது இதனையடுத்து நேற்று அதிகாலையில் முகக்கொப்பரை எடுத்தலும் அதனைத்தொடர்ந்து சக்தி அழைத்து கும்பம் எடுக்கும் நிகழச்சியும் நடைபெற்றது தொடர்ந்து நேற்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடந்து நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிசேக பூஜையும் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது இதேபோல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களிலும் மாக சிவராத்திரிவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பக்தர்கள் விடியவிடிய கண் விழித்து சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu