யானைகளை விரட்டிய இளைஞர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது வனப்பகுதியையொட்டி திருமூர்த்தி அணை பகுதிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். தண்ணீர் குடிக்க வரும் யானைகளை மலைவாழ் பகுதி இளைஞர்கள் சிலர், கற்களால் தாக்கி, நாய்களை விட்டு விரட்டியும் உள்ளனர். அதை இளைஞர்களின் நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ வாட்ஸ் மூலம் தற்போது பரவ துவங்கி உள்ளது. யானைகளின் முக்கியதுவம் அறியாமலும், உயிர்பற்றி அலட்சியம் இல்லாமல் இவ்வாறு செய்தது இயற்றை ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் வனத்துறைக்கு சென்றது. அதன் அடிப்படையில் யானைகளை துன்புறுத்தியதாக பழங்குடியின இளைஞர்களிடம் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu