கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
X

Tirupur News. Tirupur News Today- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோட்டை மாரியம்மன். (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- மடத்துக்குளத்தை அடுத்துள்ள, கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, விமரிசையாக நடந்து வருகிறது.

Tirupur News. Tirupur News Today- கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா கடந்த 18-ம் தேதி நோன்பு சாட்டப்பட்டு கம்பம் நடப்பட்டு தொடங்கியது. அமராவதி ஆற்றிலிருந்து திருக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் வளாகத்தில் நடப்பட்டது. தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தும், பால் கொண்டு வந்தும் கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், கம்பத்தில் ஊற்றப்படும் தீர்த்தத்தை புனித தீர்த்தமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்று அருந்துகின்றனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவில் வளாகத்தில் தினமும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. அபிஷேகம், சிறப்பு அலங்காரங்களுடன் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

மேலும், கோவில் வளாகத்துக்கு முன் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அக்கம்பக்கம் ஊர்களிலுள்ள உறவுகளை அழைத்து உற்சாகமாக திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

வரும் 29-ம் தேதி கோவில் சார்பாக வெண்கலப் பூவோடு எடுத்து திருக்கம்பத்தில் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் 30-ம் தேதி மற்றும் மே மாதம் 1-ம் தேதிகளிலும் தொடர்ச்சியாக கோவில் சார்பில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே 2- மற்றும் 3 -ம் தேதிகளில் பக்தர்கள் அமராவதி ஆற்றிலிருந்து ஊர்வலமாக பூவோடு எடுத்து வந்து கோவிலை வலம் வந்து வழிபாடு செய்து மீண்டும் அமராவதி ஆற்றில் கலப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பது வழக்கமாகும். அதுபோல நடப்பு ஆண்டிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. பூவோடு எடுக்கும் சமயத்திலாவது தண்ணீர் திறக்கப்படுமா? என்று பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!