மடத்துக்குளம் பகுதியில் திடீர் மழை பொது மக்கள் மகிழ்ச்சி

மடத்துக்குளம்  பகுதியில் திடீர் மழை  பொது மக்கள் மகிழ்ச்சி
X
மடத்துக்குளம் பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.அதன் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இன்று மதியம் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் அது பலத்த மழையாக உருவெடுத்தது. குறிப்பாக மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், கொழுமம், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, தூங்காவி, மெட்ராத்தி, வேடபட்டி, கழுகரை, ஜோத்தம்பட்டி. பாப்பான்குளம், சோழமாதேவி, சாமராயபட்டி, கண்ணாடிபுதூர், கிருஷ்ணாபுரம், மைவாடி, போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை மழையால் அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மழை பெய்ததால் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!