வாய்க்காலில் பெண்கள் சடலம்: மடத்துக்குளம் அருகே பரபரப்பு

வாய்க்காலில் பெண்கள் சடலம்:  மடத்துக்குளம் அருகே பரபரப்பு
X

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்து உள்ள காரத்தொழுவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் வழியில், வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இறந்த நிலையில், இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக, மடத்துக்குளம் போலீஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில், சம்பவ இடத்திற்கு மடத்துக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், நடராஜன் மற்றும் போலீஸார் சென்று, 2 பெண்களின் உடல்களை கைப்பற்றி, உடுமலைப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு பெண்களின் உடல்களை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அவர்கள், எப்படி இறந்தார்கள் என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்ரு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!