மடத்துக்குளம் அருகே பஸ் , லாரி மோதல்; 57 பேர் காயம்

மடத்துக்குளம் அருகே பஸ் , லாரி மோதல்; 57 பேர் காயம்
X

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 57 பேர் காயமடைந்தனர்.

Bus Accident News Today - திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 57 பேர் காயமடைந்தனர்.

Bus Accident News Today - தாராபுரத்தில் இருந்து கணியூர் வழியாக உடுமலை நோக்கி, நேற்று காலை தனியார் பஸ் சென்றது. பஸ்சை தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் இயக்கினார். காலை நேரம் என்பதால், பஸ்சில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மடத்துக்குளம் ரோட்டில் செக்கன் ஓடை பாலம் பகுதியில், பஸ் சென்றபோது, சோழமாதேவியிலிருந்து காரத்தொழுவுக்கு செங்கல் ஏற்றிய லாரி, எதிரில் வந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி, பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பஸ் மற்றும் லாரியின் முன் பகுதி பலமாக நொறுங்கியது. பஸ்சில் பயணித்த பலரும் காயமடைந்து, கூச்சலிட்டனர். லாரியின் டிரைவர் தலையில் பலத்த காயத்துடன், இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

அந்தவழியாக சென்ற பொதுமக்கள், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மடத்துக்குளம், உடுமலை அரசு மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் 57 பேர் காயமடைந்தனர்.இதில் லேசான காயமடைந்த 35 பேர், முதலுதவி சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினர். படுகாயமடைந்த 18 பேருக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்த லாரி டிரைவர் அருண் உள்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் பலர் காயமடைந்ததால், அவர்களது உறவினர்கள் உடுமலை, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைகளில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!