கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன் இந்து முன்னணியினர் போராட்டம்

கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன் இந்து முன்னணியினர் போராட்டம்
X

மடத்துக்குளம் கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன், கோவில் திறக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டம் செய்தனர்.

கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

மடத்துக்குளம் பகுதியில் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி இந்து முன்னணி சார்பில்,10 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மட்டும் நடக்கிறது. தற்போது தளர்வு அறிவிக்கப்படுவதால், வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துகுளம் வடக்கு ஒன்றியம் சார்பில் கணியூர் சக்தி விநாயகர் கோவில் கோவில் முன் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்,ஒன்றிய பொது செயலாளர் அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்