மடத்துகுளம் பகுதியில் மருந்து தெளிப்பு

மடத்துகுளம் பகுதியில் மருந்து தெளிப்பு
X
மடத்துக்குளம் பகுதியில் மருந்து தெளிப்பு பணி

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும், தட்டுப்பாடு ஒரு பக்கம் நிலவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வகையில் வீதி வீதியாக கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் நடக்கிறது. மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியும், தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா படுக்கைகளும் கூடுதலாக அமைக்கப்படுகிறது. வீதி வீதியாக மருந்து தெளிப்புக்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களில் சென்று கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சிலர் கை எந்திரங்களை பயன்படுத்தியும் அடித்து வருகிறார்கள், என்றனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்