உடுமலை, பல்லடம் பகுதிகளில் லோக் அதாலத்; 81 வழக்குகளுக்கு ரூ. 3.50 கோடியில் சமரச தீர்வு

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பி்ல் 59 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலூகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக்-அதாலத்) நடைபெற்றது. ஒரே அமர்வாக நடந்த இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிறு குற்றத்திற்குரிய வழக்கு 65-ல் 40 வழக்குகள் ரூ.ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 700-க்கும், வங்கி வராக்கடன் வழக்கு 3-ல் 1 வழக்குரூ.17 லட்சத்து 83 ஆயிரத்து 352-க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 28-ல் 17 வழக்குகள் ரூ.99 லட்சத்து 67 ஆயிரம், இதர சிவில் வழக்குகள் 5-ல் 1 வழக்கு ரூ.67 ஆயிரத்து 62-க்கும் ஆக மொத்தம் 101 வழக்குகள் எடுக்கப்பட்டு, 59 வழக்குகளுக்கு ரூ.ஒரு கோடியே 19 லட்சத்து 85 ஆயிரத்து 114-க்கு தீர்வு காணப்பட்டது.
இதில் உடுமலை ஜே.எம்.எண்.1 மாஜிஸ்திரேட் விஜயகுமார் உள்பட காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்;
பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) மேகலா மைதிலி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 31 வழக்குகள் எடுக்கப்பட்டு, 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2 கோடி 37 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் கடந்த 2022-ம் ஆண்டில் பல்லடம் அருகே கரையாம்புதூரில் கார் மற்றும் பைக் விபத்து நடந்தது. இந்த விபத்தில் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அவருடைய மனைவி உஷாவுக்கு நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பாலக்குமார், செல்வராஜ், மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu