பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி; கலெக்டர் தகவல்

பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி; கலெக்டர் தகவல்
X

Tirupur News- பில்டர் காபி நிலையம் அமைக்க அழைப்பு (கோப்பு படம்)

Tirupur News- சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today- சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஃபில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தாட்கோ சாா்பில் புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. இத்தொழிலைத் தொடங்க காலி இடம், கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கு பில்டா் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோா்கள் அல்லது அவா்களின் ஊழியா்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்படும்.

உரிமை கட்டணம் ரூ.2 லட்சம் விலக்கு அளிக்கப்படுவதுடன், கடைக்கு வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடியும், பில்டா் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலுக்கான திட்ட அறிக்கை தயாா் செய்ய இலவச ஆலோசனை மூலம் அளிக்கப்படும்.

எனவே, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினா்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிா்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடா்களுக்கு 30 சதவீதம் (அதிகபட்சம் ரூ.2.25 லட்சம்), பழங்குடியினருக்கு 50 சதவீதம் (அதிகப்பட்சம் ரூ.3.75 லட்சம்) வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, 5 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரியிலோ அல்லது 94450-29552, 0421-297112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story