கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Police Case | Police Rape Case
X

பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Police Case - மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Police Case -தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!