குற்றங்களை தடுக்க ‘மூன்றாவது கண்’ - போலீசார் வலியுறுத்தல்

irupur news, Tirupur news today- பிரதான ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா (கோப்பு படம்)
irupur news, Tirupur news today- தாராபுரம் நகராட்சி பகுதியில் நகராட்சி போலீசார், மக்கள் பங்களிப்போடு 252 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு அறையை போலீஸ் ஸ்டேஷனக வளாகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பல்லடம் தாலூகா செம்மியம்பாளையம் ஊராட்சியில், கிராமத்தில் உள்ள பிரதான வீதிகள் நுழைவாயில், வளைவு என முக்கிய இடங்களில் நவீனமான 31 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாடுக்கு வந்தது. மாவட்டத்தில் இரு இடங்களும் பிற இடங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியதாவது,
இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகவும், குற்றங்களை தடுப்பதில், பேருதவியாகவும் சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஒவ்வொரு வழக்குகளில் குற்றங்கள் நடக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளப்படுத்தி காட்டி கொடுக்கிறது. சிசிடிவி.கேமராக்கள் குறித்து கிராமங்களில் கூட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் நகரங்களில் மக்கள் இதன் பயன்குறித்து இன்னும் அறிவதில்லை. நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது.
ஏதோ பெயருக்கு வைக்காமல் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து இவற்றை பொருத்தி பராமரிக்க வேண்டும். ஒரு முறை செலவு செய்து நவீனமான கேமராக்களை பொருத்தினால் காலத்துக்கும் அவை இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்களை பொருத்தலாம்.
கடந்த ஆண்டு மாநகரில் நடந்த நகை கொள்ளை சம்பவம், வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு, அசாம் மாநில பெண்ணை கொன்று சூட்கேசில்அடைத்து சாக்கடை கால்வாயில் வீசி சென்ற வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக சிசிடிவி. கேமரா இருந்தது. திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12 கோடி ரூபாய் செலவில், 442 இடங்களில் ஆயிரத்து 200 சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
அதுபோக மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்பு, போலீசார், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்கள் பொருத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்கள் தொகை அதிகமுள்ள, பெரிய தொழில் நகரங்களில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. குடியிருப்புகளும் மிக அதிக அளவில் காணப்படுகிறது. இப்பகுதிகளில், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகைகளில், அடிக்கடி திருட்டு, கொாள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஆனால், கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பின்பு, பெரும்பாலும் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படுகின்றன. ஏனெனில், சமூக குற்றங்களை செய்யும் நபர்களின் நடமாட்டம், வெகு எளிதாக ஏதேனும் ஒரு இடத்தில், கேமரா கண்களில் சிக்கி விடுவதால், குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காணப்பட்டு விடுகின்றனர். ‘தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே, பல குற்றங்கள் நடக்காமல் தடுக்க முக்கிய காரணமாக இருக்கிறது’ என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu