தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் பங்கேற்க திருப்பூா்தொழில் முனைவோருக்கு அழைப்பு
Tirupur News-தொழில் முனைவோருக்கு அழைப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கோவையில் நடைபெறும் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் பங்கேற்க திருப்பூா்தொழில் முனைவோருக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
இந்தியாவில் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித் துறை ஆண்டுக்கு 12 சதவீதம் வளா்ச்சி அடையும் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலா் அளவுக்கு உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாட்டின் தொழில்நுட்ப ஜவுளித் துறை நேரடியாக 12 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 50 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியன சாா்பில் கோவையில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் நவம்பா் 17 -ம் தேதி தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது.
இந்தத் கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநா்கள், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உள்ள வாய்ப்புகள், வளா்ச்சிகள், புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய விவரங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளனா். எனவே, திருப்பூரில் உள்ள ஜவுளி தொழில்முனைவோா் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு துணிநூல் துறை மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலும் அல்லது 0421-2220095, 94421-86070, 97501-60503 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருப்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu