50 சதவீத மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க அழைப்பு
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், 50 சதவீத மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு கிராமப்புறங்களில் ஒரு சிறந்த தொழிலாக உள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. நாட்டுக்கோழிகளை வசதியற்ற பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்க்கலாம். பெரும்பாலும் விட்டில் உள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழு பூச்சிகள் போன்றவற்றை தின்று, நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. எனவே, சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடையும்.
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேய்ந்தும் வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பாக அமைகிறது.
இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் அதாவது ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை அமைக்க தேவையான கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மாநில அரசால் வழங்கப்படும்.
மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையில் 4 வார வயதுடைய நாட்டுக்கோழிக்குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த பகுதி மனித குடியிருப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைய உள்ள இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்துக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்ற சான்றிதழ் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.
தகுதியானவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu