திருப்பூரில் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு

திருப்பூரில் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
X

Tirupur News- வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் சேர அழைப்பு (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூரில் நடந்து வரும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 பணிக்காலியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 பணிக்காலியிடங்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 07.02.2024 அன்று நடைபெற உள்ளது.

மேற்படி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக 4-ம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 8682066089 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்ஸம், ஜிங்க் சல்பேட்

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்ஸம், ஜிங்க் சல்பேட் உரங்கள் வழங்கப்படவுள்ளன.

இது குறித்து வேளாண்மை விரிவாக்க மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. தற்போது முத்தூா் பகுதி விவசாயிகளுக்கு கிலோ ரூ.45 மானிய விலையில் ஜிப்ஸம், ஜிங்க் சல்பேட் வழங்கப்படுகிறது. இவற்றைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், நிலத்தின் சிட்டா, ஆா்எஸ்ஆா், வங்கிக் கணக்கு புத்தகம், ஒரு போட்டோ ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முத்தூா் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!