மீன்வளர்ப்பு திட்டம்; விண்ணப்பிக்க அழைப்பு
Tirupur News,Tirupur News Today- மீன்வளர்ப்பு திட்டம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக மீன்வளர்ப்பு திட்டம் இருப்பதால், மீன்வளர்ப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது,
பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ம் ஆண்டுக்கான திட்டங்களின் கீழ் ஒரு எக்டேர் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மானியம், புதிய மீன்வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் புறக்கடையில் சிறிய அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன்பெறலாம். எனவே விருப்பமுள்ளவர்கள், நல்ல தங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் 89037 46476 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், எண்.7-ம்தளம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638 011 என்ற முகவரியிலும், 0424 2221912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu