திருப்பூரில் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூரில் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. (கோப்பு படம்) 

Tirupur News. Tirupur News Today-வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும்.

கல்வித்தகுதி தேவையில்லை. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு இல்லை. மொத்த திட்டத்தில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் முன்முனை மானியமாகவும் வழங்கப்படும். எனவே தகுதியானர்கள் சொந்த மூலதனம் செலுத்த தேவையில்லை. 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். சொந்த முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் 35 சதவீதம் பின்முனை மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தை 0421 247507 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 1-ந் தேதி முதல் www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் மாதம் 30-ம் தேதி கடைசிநாள்.

இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் வருகிற 30-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இலவச பயிற்சியில் பங்கேற்க தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, 0421 2999152 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!