‘அசோக சக்ரா’ விருது பெற, விண்ணப்பிக்க அழைப்பு
Tirupur News,Tirupur News Today- அசோக் சக்ரா விருது பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- அசோகச் சக்கரம், இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன.இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் பெற தடை இல்லை.
இயற்கைசீற்றம், விபத்து, தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறி, கொள்ளை தீவிரவாத ஊடுருவல் ஆகியவற்றில் இருந்து தனிப்பட்ட முறையில் பொதுமக்களை காப்பாற்றி வெளிப்படையான துணிச்சல், சுயதியாகம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்தவர்களுக்கு சுதந்திர தின விழாவின்போது மத்திய அரசால் வழங்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க, பாதுகாப்பு பணியாளர்களை தவிர, அனைத்து தரப்பு குடிமக்களும், காவல் படைகள், மத்திய ஆயுத படைகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் தகுதியானவர்கள். தகுதி வாய்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.36-ல் உரிய படிவம் பெற்று வருகிற 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0421 2971168 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu