திருப்பூர் மாவட்டம்; மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணிவழங்க கலந்தாய்வு

திருப்பூர் மாவட்டம்; மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணிவழங்க கலந்தாய்வு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில்,  மாற்றுக்கடைகளில் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடை ஊழியர்கள் 88 பேருக்கு, மாற்றுக்கடைகளில் பணி வழங்க கலந்தாய்வு நடந்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடை ஊழியர்கள் 88 பேர் மாற்றுக்கடைகளில் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு பணிமூப்பு அடிப்படையில் நடந்தது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், கோவில் அருகில் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கடந்த வாரம் 500 கடைகள் மூடப்பட்டது. கோவை டாஸ்மாக் மண்டலத்திற்குட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளிலும் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் 22 பேர், விற்பனையாளர்கள் 40 பேர், உதவி விற்பனையாளர்கள் 26 பேர் என மொத்தம் 88 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் பணி செய்த 24 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியம் தலைமையில், கிடங்கு மேலாளர் ஜெகதீசன் முன்னிலையில் நடந்த இந்த கலந்தாய்வில், 88 ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களது பணிமூப்பு தொடர்பான ஆவணங்களையும், சான்றிதழ்களையும் சமர்ப்பித்தனர்.

கலந்தாய்வு குறித்து டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது,

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதை தமிழக அரசு ஏற்கனவே உறுதி செய்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 88 பேருக்கு கலந்தாய்வின் மூலம் பணிமூப்பு அடிப்படையில் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கலந்தாய்வில் கலந்து கொண்ட ஊழியர்கள் கூறும்போது, அரசு அறிவுறுத்தலின்படி கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாகவும், பணிமூப்பு அடிப்படையிலும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. ஏற்கனவே பணியாற்றிய கடைகள் மூடப்பட்டாலும், மீண்டும் வேலை கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது, தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்தனர்.

முன்னதாக கலந்தாய்வை ஒட்டி ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட கடைகள், அதில் பணியாற்றிய ஊழியர்களின் விவரங்கள் மற்றும் கலந்தாய்வுக்கான விவரங்கள் அனைத்தும் அறிவிப்பாக டாஸ்மாக் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

Tags

Next Story
ஓட்டு அரசியலுக்கு இலவசங்கள் எனில் கடும் எதிர்ப்பு - பா.ஜ. அண்ணாமலை வெளியிட்ட பளிச் எச்சரிக்கை..!