திருப்பூரில் அய்யப்ப சுவாமி படங்களுடன் கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூரில் அய்யப்ப சுவாமி படங்களுடன் கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்
X

Tirupur News- திருப்பூரில் தயாரிக்கப்பட்ட அய்யப்ப சுவாமி படம் பொறித்த கருப்பு நிற டீ - சர்ட்டுகள். (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் அய்யப்ப சுவாமி படம் பொறித்த கருப்பு நிற டீ - சர்ட்டுகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

Tirupur News,Tirupur News Today- சபரிமலைக்கு செல்ல அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளதால், அவர்கள் அணியும் வகையில் அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.

அய்யப்ப பக்தர்கள் கருப்பு வேட்டி, கருப்பு சட்டை, துண்டு அணிவது வழக்கம். கருப்பு நிற சட்டைகளை விட டீ-சர்ட் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலத்தில் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனைக்கு அதிக கிராக்கி உள்ளது. அய்யப்ப சாமி படம், புலி வாகனத்தில் அய்யப்ப சாமி அமர்ந்து இருப்பது போன்ற படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகமும், அய்யப்ப சாமி படம் அச்சிடப்பட்ட டீ-சர்ட் அதிகம் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில் அய்யப்பசாமி படம் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்டுகள் சில்லறை விற்பனைக்காக திருப்பூரில் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரிகள் கூறும்போது, சீசன் பனியன் ஆடைகள் விற்பனை நன்றாக இருக்கும். சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கருப்புநிற டீ-சர்ட் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.100 முதல் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனையாகிறது. இளம்பக்தர்கள் அதிகம் வாங்குகிறார்கள். அய்யப்ப சாமி படம் ஒளிரும் மையால் அச்சிட்டு டீ-சர்ட் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

சபரிமலை சீசன் காலகட்டத்தில் சட்டைகளை காட்டிலும் பனியன், டீ சர்ட்டுகளை அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்துவது வழக்கம். அதனால், இந்த முறை அய்யப்ப சுவாமி படம் பதிக்கப்பட்ட டீ சர்ட்டுகளை அதிகளவில் பக்தர்கள் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!