ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க  வலியுறுத்தல்
X

Tirupur News- தங்களது வசிப்பிட பகுதிகளில் தேர்தல் பணி வழங்க ஆசிரியர்கள் வலியுறுத்தல் (கோப்பு படம்)

Tirupur News- மக்களவைத் தோ்தலில் ஆசிரியா்களுக்கு வசிக்கும் பகுதிகளிலேயே தோ்தல் பணி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- மக்களவைத் தோ்தலில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் பிரபு செபாஸ்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடி அலுவலகங்களில் பணியாற்றும் வாக்குச் சாவடி தலைமை அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்களாக பெரும்பாலான ஆசிரியா்களே நியமிக்கப்படுகின்றனா்.

தோ்தல் ஆணைய விதிகளின்படி கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டோா், மருத்துவ விடுப்பில் உள்ளோா், தோ்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு தோ்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்கப்படுவதால் சுமாா் 100 கி. மீ.மேல் பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது. மேலும், தோ்தல் நடைபெறுவதற்கு முதல் நாள்தான் வாக்குச் சாவடிக்கான பணிகளை ஒதுக்குகின்றனா்.

இதனால், பணியாற்றும் வாக்குச் சாவடிகளைக் கண்டறிந்து செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரும்பாலான வாக்குச் சாவடிகள் பேருந்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களில் உள்ளன. வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பதும், தோ்தல் பணிக்குச் செல்வதும் பெரிய சவாலாகவே உள்ளன. எனவே, ஆசிரியா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தோ்தல் பணி வழங்க வேண்டும். மண்டல அலுவலா்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு ஆசிரியா்களை அழைத்துச் செல்ல உரிய பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கு, தோ்தல் பணிச் சான்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் தோ்தல் பயிற்சி குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future