திருப்பூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தினவிழா

திருப்பூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தினவிழா
X

Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் நடந்த சுதந்திர தினவிழாவில், மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் நேற்று சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவிநாசி அரசு கல்லூரியில் சுதந்திர தினவிழா

Tirupur News,Tirupur News Today- அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், கல்லூரி முதல்வர் நளதம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினம் குறித்து, மாணவ, மாணவியர் மத்தியில் பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பேரவை பொறுப்பாசிரியர் செல்வதரங்கிணி மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் செய்திருந்தனர்.

ஏவிபி கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா

திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் திருப்பூர் ஐ பவுண்டேசன் டாக்டர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ‘சுதந்திர இந்தியாவில் நம் அனைவரின் கடமைகளும், பொறுப்புகளும்,’ என்ற தலைப்பில் பேசினார்.

ஏ.வி.பி.கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை வகித்துப் பேசினார்.ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் பிரமோதினி வரவேற்றார். ஏ.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டயானா நன்றி கூறினார்.

ஏ.வி.பி.பூண்டி பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்றார். கண் டாக்டர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு நன்றி கூறினார்.


திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவிற்கு ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். ஏ.வி.பி.கல்லூரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். டாக்டர் ரவி சிறப்பு விருந்தினராக தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் பற்றி பேசினார். கல்லூரி நிர்வாக அலுவலர் அசோக்குமார் நன்றி கூறினார்.

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் டாக்டர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பள்ளி தாளாளர் கார்த்திகேயன், லதாகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business