பருப்பு வகைகள் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை

பருப்பு வகைகள் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை
X

Tirupur News,Tirupur News Today- பருப்பு வகைகள் விலை அதிகரிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அரிசி, பருப்பு வகைகளின் விலை உயர்வால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- சமையலில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விலை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி திருப்பூர், உடுமலையில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை 120 ரூபாய், சில்லறை விலை 140 ரூபாய்க்கு விற்றது. தற்போது மொத்த விலை 140 ரூபாய், சில்லறை விலை 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பாசிப்பருப்பு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 130 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகியுள்ளது. சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு 200 ரூபாய் கூடி கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு, 150 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது.கர்நாடக பொன்னி கிலோ 55 ரூபாயில் இருந்து 60, ராஜபோகம் பொன்னி கிலோ 58ல் இருந்து 64, இட்லி அரிசி 40ல் இருந்து 45 ரூபாயாகியுள்ளது.

அரிசி பருப்பு விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கவலை அளித்தாலும், எண்ணெய் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டர் 150 முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இம்மாதம் லிட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் சாமி கூறுகையில், நடப்பு மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5ரூபாய் வரையும், பருப்பு, உளுந்து விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே வேளையில், கடலை எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. வெளி மாநில வரத்து குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. சீரகம் இதுவரை இல்லாத விலை உயர்வை தற்போது எட்டியுள்ளது என்றார்.

பருப்பு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி, அவற்றின் சாகுபடிக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவே பருப்பு சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

எனவே குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,740 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னை, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்ட மானியம் கிடைக்கும்.இதற்காக உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி பருவத்திலும் பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!