திருப்பூரில், 49 இடங்களில் மழை மானிகள் அமைக்க முடிவு
Tirupur News- மழைமானி (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் 49 இடங்களில் மழை அளவைக் கணக்கிட மழை மானிகள் அமைக்கப்படவுள்ளன.
மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0மிமீ முதல் 25மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
அளவிடும் முறை
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லி லிட்டர் அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லிட்டர் என்ற அளவைவிட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு மில்லி லிட்டர் ஆகும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் 49 இடங்களில் மழை அளவைக் கணக்கிட மழை மானிகள் அமைக்கப்படவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் தினசரி மழை அளவைக் கணக்கிட பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அரசுக்கு நாள்தோறும் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழை அளவைக் கணக்கிட மனித சக்தியை பயன்படுத்துவதைத் தவிா்க்கும் வகையில் தானியங்கி மழை மானிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 வட்டங்களில் 49 தானியங்கி மழை மானிகள் ஏப்ரல் 30 -ம் தேதிக்குள் அமைக்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu