திருப்பூா் மாவட்டத்தில், வரும் 15ம் தேதி 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில், வரும் 15ம் தேதி 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
X

Tirupur news- சுதந்திர தினம்: திருப்பூர் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ( மாதிரி படங்கள்)

Tirupur news- சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

Tirupur news, Tirupur news today- சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

இதில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணைய வழி வரி செலுத்தும் சேவை குறித்து விவாதித்தல், இணையவழி மனைப் பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம பொதுமக்கள் மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!