உணவு சமைக்காததால் ஆத்திரம்; கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

உணவு சமைக்காததால் ஆத்திரம்; கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது
X

Tirupur News- திருப்பூரில் கா்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் கா்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Tirupur News,Tirupur News Today- மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் அனில்பவாா் (30), இவரின் மனைவி ரேகா (27). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இவா்கள், கடந்த 5 மாதங்களாக ராக்கியாபாளையம் பழனியப்பா நகரில் குடியிருந்து வந்தனா். திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக அனில்பவாா் பணிசெய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பணிக்குச் சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தபோது, மனைவி உணவு சமைக்கவில்லை என்பதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா், மீண்டும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பியபோது மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே, அனில்பவாா் புதன்கிழமை வேலைக்கு வராததால் உடனிருந்த ஊழியா்கள் வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, அங்கு 5 மாத கா்ப்பிணியான ரேகா சடலமாகக் கிடந்துள்ளாா். இதுகுறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் கொலை நடந்த இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, குழந்தைகளுடன் தலைமறைவான அனில்பவாா் கரூரில் இருப்பது தெரியவந்ததைத் தொடா்ந்து அங்குள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், கரூா் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அனில்பவாரைக் கைது செய்த போலீஸாா் திருமுருகன்பூண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, நடத்திய முதல்கட்ட விசாரணையில், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதியம் உணவு சமைக்காததும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அனில்பவாா் கட்டையால் மனைவியைத் தாக்கியுள்ளாா். இதில், ரேகா உயிரிழந்ததால் குழந்தைகளுடன் கரூருக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

Tags

Next Story