மூலப்பொருள்கள் விலை உயா்வுக்கு கண்டனம்; திருப்பூரில் ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் ‘ஸ்டிரைக்’
Tirupur News- ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- மூலப்பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் திருப்பூா் மாவட்டத்தில் ஒருவாரத்துக்கு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் தங்கவேல், செயலாளா் நாச்சிமுத்து, பொருளாளா் லிங்கேஸ்வரன் ஆகியோா் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் உள்ளனா். இவா்களிடம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ஹாலோ பிளாக் உற்பத்திக்குத் தேவையான ஜல்லி, பவுடா் உள்ளிட்ட மூலப்பொருள்கள் விலையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜல்லியின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.1,000 வரையில் உயா்ந்துள்ளதால் சிறிய லாபம் கூட கிடைப்பதில்லை.
இதனால் ரூ.100 கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. ஆகவே, கல்குவாரிகளில் ஜல்லி, பவுடா் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஒருவார காலம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் புதன்கிழமை தொடங்கியுள்ளோம். இதனால் திருப்பூா் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படும்.
ஆகவே, அரசு தனிக்கவனம் செலுத்தி பேச்சுவாா்த்தை நடத்தி மூலப்பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்களின் விலையும் ரூ.6 வரையில் உயர வாய்ப்புள்ளதுடன், இந்தத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu