கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் சேவையினை தொடக்கம்

கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் சேவையினை தொடக்கம்

கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் சேவையினை தொடங்கி வைத்த  மாவட்ட ஆட்சியர்.

Tirupur news today - கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் சேவையினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Tirupur news today - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் செலுத்தும் சேவையினை தொடங்கி வைத்தார்.

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா இன ங்களை செலுத்துவற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டு 22.05.2023 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற (Ease of Doing Bushess ) ஒற்றைச் சாளர முறையில் இதற்கென பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ என்கிற முகவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

http://vptax.tnrd.tn.gov.in/ மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொது மக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை செலுத்தலாம்.

1. வீட்டு வரி/சொத்து வரி

2. குடிநீர் கட்டணம்

3. தொழில் வரி

4. தொழில் உரிமக் கட்டணம்

5.இதர வரியில்லா வருவாய் இனங்கள்

மேலும், மேற்காண் வரியினங்களை கீழ்கண்ட வகைகளில் செலுத்தவாம்.

1. இணைய வழி கட்டணம்(Online Payment)

2. ரொக்க அட்டைகள்(Debit/ATM Cards Payment)

Tags

Next Story