தாட்கோ நிறுவனம் மூலம், மாணவர்களுக்கு இலவச பயிற்சி

தாட்கோ நிறுவனம் மூலம், மாணவர்களுக்கு இலவச பயிற்சி
X

Tirupur News- மாணவர்களுக்கு பயிற்சி தரும் தாட்கோ நிறுவனம் (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tirupur News,Tirupur News Today- எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பதவிக்கான தோ்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்க உள்ளஐ.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பணிக்கான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இத்தோ்வில் பங்கேற்க 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வரும் 27 -ம் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த தோ்வு முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது.

இந்தப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.இந்தத் தோ்வில் வெற்றி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் மூலமாக இலவச பயிற்சியை வழங்க தட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்பும் மாணவா்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story