திருப்பூரில் போலீஸ் எஸ்.ஐ உடற்தகுதி தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நவ. 7ல் துவக்கம்
Tirupur News- போலீஸ் எஸ்.ஐ உடல் தகுதித்தேர்வுக்கு, திருப்பூரில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய போலீஸ் எஸ்.ஐ க்களுக்கான எழுத்துத் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடற்தகுதி தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிக்கையில் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வு நவம்பா் 7 -ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து இளைஞா்களும், உதவி ஆய்வாளா் பணிக்கான உடற்தகுதி தோ்வினை எதிா்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த உடற்கல்வி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக, திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu