திருப்பூரில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு

திருப்பூரில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு
X

Tirupur News- பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு (கோப்பு படம்)

Tirupur News- பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு, திருப்பூரில் வரும் 27-ம் தேதி துவங்க உள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டு திட்ட நிரலின்படி, பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ம் தேதியாகும்.

இந்த தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற 27-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற தங்களது சுய விவரத்தை https://forms.gle/gsZtU6Quse6iG71XA என்ற லிங்க்கில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare