நிரம்பியது அமராவதி அணை: திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

நிரம்பியது அமராவதி அணை:  திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
X

உடுமலை அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.

அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது; இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், அணைக்கு நீர் வரத்து உயர்ந்தது.

அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழையால் அணைக்கு வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, அப்படியே உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!