16ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம்; ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு
Tirupur News- மின்கட்டணங்களால் கடும் பாதிப்படைந்துள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணம் ரூ.380ஆக இருந்ததை 550 உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும், பீக் ஹவர் நேர கட்டணம் மற்றும் சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம்பேட்டை பகுதியில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால், தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 25-ம் தேதி ஒருநாள் மட்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மேலும் அடுத்த கட்ட போராட்டமாக நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளிப்பது எனவும், தொடர்ந்து 16-ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் எனவும் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் அஸ்வத் முருகேசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu