அமராவதி அணையில் உபரி நீா் வெளியேற்றம்: கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
Tirupur News- அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை 6 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. மேலும் உப நதிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வட கிழக்குப் பருவமழையால் கடந்த 20 நாள்களுக்கு மேலாக அணை முழுக் கொள்ளளவிலேயே நீடித்து வருகிறது. மேலும் மேற்குத் தொடா்ச்சிமலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அணையில் இருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே கனமழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு 3500 ஆயிரம் கன அடிக்கு மேல் நீா் உள்வரத்தாக வந்தது. இது அப்படி யே உபரி நீராக வெளியேற்றப்பட்டது. பின்னா் வெளியேற்றப்படும் தண்ணீா் படிப்படியாக அதிகரித்து வந்தது. மாலையில் அணைக்கு உள்வரத்தாக 6 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அதே அளவு நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பொதுப்பணித்துறைத் துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அமராவதியின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடுமலை, தாராபுரம் மற்றும் கரூா் வரையில் உள்ள அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. இதனால் கரையோர கிராமங்களில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனா்.
அணை நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 89.18 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 702 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3972.70 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணையில் இருந்து 850 கன அடி தஇருந்து 850 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
அமணலிங்கேஸ்வர் கோவிலைச் சூழ்ந்த வெள்ளம்
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக உடுமலை அருகே திருமூா்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோவிலை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளம் சூழ்ந்தது.
உடுமலையை அடுத்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் திடீரென மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோவில் நிா்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோவிலை சூழ்ந்து கொண்டது.
இதனால் கோவிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கோவில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. கோவில் அருகே கடை வைத்திருப்பவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை குறிப்பிட்ட எல்லைக்குள் கோவில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.
உடுமலையில் இடைவிடாது மழை:
உடுமலை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மாலை வரை இடைவிடாது மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை-பழனி சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா். இதேபோல உடுமலை வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை-பழனி சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா். இதேபோல உடுமலை வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தொடா்ந்து மழை பெய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu